கோவில் திருப்பணிகளுக்கு அரசு மானியம் ரூ. 3 கோடியாகிறது
சென்னை:
கோவில் திருப்பணிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியத் தொகையை ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ. 3 கோடியாக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்து அறநிலையத் துறையின் உயர்மட்டக் கூட்டம் கோட்டையில் நடந்தது. முதல்வர் கருணாநிதி, அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், குன்றக்குடி ஆதீனகர்த்தா பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார்,
மற்றும் தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆகிய ஆதீனங்களின் பிரதிநிதிகள், ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகளின் பிரதிநிதி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இதில் கோவில்களில் நடைபெறும் திருப்பணிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியத் தொகையை ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ. கோடியாக உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது.
கோவில்களுக்குச் சொந்தமான காலியாக உள்ள நிலங்கள், மனைகளை கோவில்களுக்கு நிரந்தர வருவாய் தரும் வகையில் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் கோவில் நிலங்கள் மற்றும் மனைகள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துவது, கோவில்களுக்குச் சொந்தமான இடங்களில் குடியிருப்போருக்கு நியாயமான வாடகை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் வாடகை உயர்வு ஆகியவற்றை சீரமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கோவிலுக்குச் சொந்தமான வயது முதிர்ந்த மற்றும் உடல்நலம் குன்றிய யானைகளை வனத்துறையிடம் ஒப்படைத்து அவற்றை அரசு செலவிலேயே பராமரிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications