தேமுதிக கோஷ்டி மோதல்-நிர்வாகிகளுக்கு அடி, உதை
அறந்தாங்கி:
அறந்தாங்கி தேமுதிகவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு மாவட்ட நிர்வாகிகளுக்கு அடி, உதை விழுந்தது.
அறந்தாங்கி ஆலங்குடியில் திருவரகுளம் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட தேமுதிக தலைவர் ஜாகீர் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் ஒன்றிய தலைவர் மன்மதன், கொத்தமங்களம் நகர செயலாளர் குமார், விடியல் குமார் ஆகியோர் முக்கிய பதவிகளை மாவட்ட நிர்வாகிகள் பணம் பெற்றுக் கொண்டு விற்று வருவதாக குற்றம் சாட்டினர்.
இதையடுத்து ஜாகீரின் ஆதரவாளர்கள் மன்மதன், குமார், விடியல் குமார் ஆகியோரை தாக்கினர். இதையடுத்து இரு தரப்பினரும் தங்களது ஆட்களை அங்கு குவித்தனர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பும் பயங்கரமாக அடித்துக் கொண்டனர். நாற்காலிகள் பறந்தன, டேபிள்கள் உடைத்து நொறுக்கப்பட்டன.
கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் எந்த பாகுபாடும் இல்லாமல் சரமாரியாக அடி, உதை விழுந்தது. இதற்கு மகளிர் அணியினரும் தப்பவில்லை, மகளிர் அணியினர் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
இதையடுத்து அவர்களாகவே டயர்ட் ஆகி சண்டையை நிறுத்திவிட்டு கலைந்து சென்றனர். எல்லாம் முடிந்தவுடன் அங்கு வந்த போலீஸார் இப்போது யாரும் இல்லாத ஹாலுக்கு பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications