திமுக செயலாளர் கமிஷன் கேட்டு மிரட்டுவதாக மதிமுக புகார்
திருநெல்வேலி:
தமிழக அமைச்சர் கீதா ஜீவனின் தந்தையும், தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளருமான பெரியசாமி, கமிஷன் கேட்டு மிரட்டுவதாக மதிமுக மாவட்ட செயலாளர் புகார் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் நிஜாம் நிருபர்களிடம் கூறுகையில், நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் நெடுஞ்சாலை துறை பணிகளுக்கான ஒப்பந்தத்தினை நான் கடந்த 12 ஆண்டுகளாக எடுத்து நடத்தி வருகிறேன். தற்போது நாபார்டு வங்கியின் உதவியோடு ரூ.7 கோடி செலவில் 40 பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளை டெண்டர் எடுப்பதில் (அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை) தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமி 15 சதவிகித கமிஷனும், அவரது அடியாட்களுக்கு 3 சதவிகித கமிஷனும் ஆக 18 சதவிகித கமிஷன் கேட்டு மிரட்டுகிறார்.
ஏற்கனவே திசையன்விளை காண்ட்ராக்டர் ஜெயக்குமாரின் ஒப்பந்தம் இது போன்ற அரசியல் தலையிட்டால் ரத்து செய்யப்படும் நிலையில் உள்ளது. இது போன்ற செயல்பாடுகள் குறித்து நெல்லையில் ஆட்சியர் தலைமையில் நடந்த ஒப்பந்ததாரர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகளும் இது போன்ற சம்பவங்களுக்கு துணை போகின்றனர்.
இது குறித்து கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார்.
-
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications