சட்டசபை தொடரை நீட்டிக்க பாமக கோரிக்கை
சென்னை:
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடரை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஆனால் நிறைய பிரச்சனைகளை பற்றி பேச வேண்டி இருப்பதால் சட்டசபை கூட்டத் தொடரை நீடிக்க வேண்டும் என்று பாமக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது,
சட்டசபையின் கூட்டத்தொடர் வரும் 22ம் தேதிவரை நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த காலம் போதாது. ஏனெனில் பல்வேறு பிரச்சனைகளை பற்றி சபையில் விவாதிக்க இருப்பதால், சட்டசபை தொடர் நடக்கும் நாட்களை நீடிக்க வேண்டும்.
இதுகுறித்து அனைத்து கட்சிகளின் சார்பில் அரசிடம் முறைப்படி கோரிக்கை வைக்க இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications