உல்லாசம்..வாலிபரிடம் பணம் பறித்த பெண் கைது
சென்னை:
தன்னிடம் உல்லாசமாக இருக்க வந்த வாலிபரை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த பெண்ணை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
சென்னை கோயம்பேடு பகுதியில் டீக்கடையில் வேலை பார்த்து வருபவர் செந்தில்குமார் (25). தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக தாம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவரை ஒரு பெண் அவருக்கு சைகை காட்டி விபச்சாரத்துக்கு அழைத்துள்ளார். செந்தில்குமார் அந்த பெண்ணின் பின்னால் சென்றுள்ளார். 500 ரூபாய் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று அந்த பெண் கூறியதால், தாம்பரம் ரயில் நிலையம் அருகில் உள்ள முட்புதரில் இருவரும் சேர்ந்து அசிங்கத்தை முடித்துள்ளனர்.
செந்தில்குமார் 500 ரூபாய் கொடுத்துவிட்டு ஊருக்கு கிளம்பத் தாயாராகும் போது, அங்கு சினிமாவில் வரும் அடியாள் போல வந்த ஒருவன் செந்தில் குமாரை கத்தியைக் காட்டி மிரட்டி எல்லா பணத்தையும் பறித்துள்ளான்.
செந்தில்குமார் உதவி கேட்டு கூச்சல் போடவே அங்கிருந்த ரயில்வே போலீசார் ஓடி வந்தனர்.
இதை பார்த்த அந்த முரட்டு வாலிபர் செந்தில்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான். அவருடன் ஓட முயன்ற அந்தப் பெண்ணை ரயில்வே போலீசார் விரட்டி பிடித்தனர்.
பின்னர் போலீசார் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.
அந்த பெண்ணின் பெயர் குட்டி என்றும், இவர் தன்னிடம் உல்லாசமாக இருக்க வரும் ஆண்களிடம் அந்த வாலிபரை பயன்படுத்தி கொள்ளை அடிப்பதை நீண்ட காலமாக செய்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications