பாக். திரும்பினார் பெனாசிர்-ஆயிரக்கணக்கானோர் வரவேற்பு
கராச்சி:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 8 ஆண்டு வெளிநாட்டு வாசத்திற்குப் பின்னர் இன்று பாகிஸ்தான் திரும்பினார். கராச்சி விமான நிலையத்தில் பெரும் திரளானோர் கூடி அவரை வரவேற்றனர். விமானத்திலிருந்து இறங்கிய பெனாசிர் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் மல்க காணப்பட்டார்.
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு முஷாரப் ஆட்சியைப் பிடித்தவுடன் பெனாசிர் நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் லண்டனிலும், துபாயிலுமா கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்தார் பெனாசிர்.
இந்த நிலையில் முஷாரப்புக்கும், பெனாசிருக்கும் இடையே, அதிபர் தேர்தலையொட்டி சில சமரசப் பேச்சுக்கள் நடந்தன. அதில் சில உடன்பாடுகளும் ஏற்பட்டன. இதையடுத்து நாடு திரும்ப தீர்மானித்தார் பெனாசிர்.
நாடு திரும்புவதை சற்று தாமதப்படுத்துமாறு முஷாரப் தரப்பில் பெனாசிருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும் அதை பெனாசிர் ஏற்கவில்லை. திட்டமிட்டபடி நாடு திரும்புவேன் என்று கூறியிருந்தார் அவர்.
அதன்படி இன்று அவர் பாகிஸ்தான் திரும்பினார். பெனாசிர் வருகையெயாட்டி கராச்சி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. பெனாசிரின் உருவப் படங்கள், தோரணங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருக்க துபாயிலிருந்து கராச்சிக்கு வந்து சேர்ந்தார் பெனாசிர்.
விமானத்திலிருந்து வெளியே வந்த அவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். கண்களிலிருந்து பெருகி வந்த கண்ணீரை அடக்க முடியாமல் கைகளை கூப்பி கடவுளுக்கு நன்றி சொல்லியபடி கண்ணீரைத் துடைத்துக் ெகாண்டு விமானத்திலிருந்து வெளியே வந்தார்.
அப்போது அவர் பேசுகையில், அற்புதங்களின் மீது எனக்கு நம்பிக்ைக உண்டு. நான் நாடு திரும்பியதும் கூட ஒரு அற்புதம்தான் என்றார் பெனாசிர்.
பெனாசிருடன் பாகிஸ்தான் மக்கள் கட்சி துணைத் தலைவர் மக்தூம் அமீன் பாஹிம், நஹீத் கான், ரஹ்மான் மாலிக், சனம் பூட்டோ, லைலா உள்ளிட்ேடாரும் உடன் வந்தனர். கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் வந்தனர்.
கராச்சி நகரே விமான நிலையத்திற்குத் திரண்டு வந்தது போல விமான நிலையத்திற்கு வெளியே மக்கள் தலைகளாக காட்சி அளித்தது.
பெனாசிர் உயிருக்கு தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்ததால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஹெலிகாப்டர் மூலமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்திய நேரப்படி கராச்சி விமான நிலையத்திற்கு பெனாசிர் பயணித்த விமானம் பிற்பகல் 2.30 மணிக்கு வந்து சேர்ந்தது.
குண்டு துளைக்காத வாகனத்தில் அங்கிருந்து பெனாசிர் அழைத்துச் செல்லப்பட்டார். நேராக ஜின்னா நினைவிடம் அமைந்துள்ள பிலவல் ஹவுஸிற்கு அவர் செல்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications