மாணவியிடம் சங்கிலியை பறித்தவனுக்கு தர்ம அடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த மாணவியிடம் சங்கிலியை பறித்த கொள்ளையனை விரட்டி பிடித்த மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
சென்னையை அடுத்துள்ள மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் திர்ஷி. இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்தவுடன் வீட்டிற்கு செல்வதற்காக வேளச்சேரி, விஜயநகர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவன் திர்ஷியின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்து கொண்டு ஓடினான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திர்ஷி திருடன்... திருடன்.... என்று கூச்சலிட்டார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையனை விரட்டிச் சென்று பிடித்து அவனை தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் அவனை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications