திருவனந்தபுரம்-நாகர்கோவில் ரயிலில் தீ: பயணிகள் தப்பினர்
நாகர்கோவில்:
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வந்துகொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவனந்தபுரம்-நாகர்கோவில் பாசஞ்சர் ரயில் நேற்று காலை 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு கிளம்பியது. 14 பெட்டிகளுடன் வந்த அந்த ரயிலில் 800க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
காலை 8.50 மணிக்கு இரணியல் ரயில் நிலையத்தைத் தாண்டி பள்ளியாடி அருகே உள்ள பழையகடை குகை பாலத்தை ரயில் அடைந்தது.
அப்போது ரயிலின் என்ஜினில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து மிக புத்திசாலித்தனமாக செயல்பட்ட டிரைவர் ரயிலை மெதுவாக இயக்கி முதலில் குகையை விட்டு வெளியே வரச் செய்தார்.
குகைக்கு வெளியே வந்தவுடன் சடன் பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். ரயிலில் இருந்த பயணிகளையும் உடனே இறங்கச் செய்தார்.
தீயும் புகையுமாக இருந்தது கண்ட பயந்து போன பயணிகள் அலறியடித்துக்கொண்டு ரயிலை விட்டு குதித்து குகை பாலத்தின் மேல்பகுதியில் உள்ள சாலைக்கு ஓடினர்.
தகவல் அறிந்த குழித்துறை தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். தீயணைப்பு வாகனங்களை குகைப் பாலத்தின் மேல்பகுதி சாலையில் நிறுத்திக் கொண்டு அங்கிருந்து என்ஜின் மீது நீரைப் பாய்ச்சி தீயை அணைத்தனர்.
பின்னர் மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு ரயில் நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
தீப் பற்றிய நிலையில் குகைக்குள் ரயில் நின்றிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். தீயை அணைப்பதும் சிரமமாகியிருக்கும். குகைக்கு வெளியே என்ஜினைக் கொண்டு வந்து நிறுத்தியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தால் சென்னை-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-பெங்களூர் எக்ஸ்பிரஸ் மற்றும் பல ரயில்கள் தாமதமாயின.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications