நெல்லை, தூத்துக்குடியில் விடிய விடிய மழை
திருநெல்வேலி:
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்தது. மணிமுத்தாறு அணைப் பகுதிகளில் அதிக பட்சமாக 108 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அக்18ம் தேதியிலிருந்து 25ம் தேதிக்குள் துவங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரம் முன்னதாகவே வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மதிய நிலவரப்படி அம்பாசமுத்திரம் 60மி.மீ, ஆய்க்குடி 6.2மி.மீ, நாங்குநேரி 32மி.மீ, பாளையங்கோட்டை 20.4மி.மீ, ராதாபுரம் 3மி.மீ, சங்கரன்கோவில் 9.4மி.மீ, செங்கோட்டை 25மி.மீ, சிவகிரியில் 6.2மி.மீ, தென்காசி 14.1மி.மீ, நெல்லையில் 15.2மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 107.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 945 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 922 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. பாபநாசம் மேலணையில் 32மி.மீ மழையும், கீழணையில் 45மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 116.14 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 61.80 அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 503 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 20 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சேர்வலாறு அணையில் 14மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் அதிகபட்சமாக 108.40 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. பிற அணைகளை பொறுத்தவரை கடனாநதியில் 5மி.மீ, அடவிநயினார் அணையில் 342மி.மீ, நம்பியாற்றில் 33மி.மீ, கொடுமுடியாறு அணையில் 10மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி வட்டாரங்களில் பருவமழை நன்றாக பெய்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications