காற்றாலைகள் கைவிட்டதால் தமிழகத்தில் கடும் மின் தட்டுப்பாடு
சென்னை:
தமிழகத்தில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் அடிக்கடி மின்சாரம் தடைபட்டு வருகிறது. இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் பாமக கிளப்பியது.
பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி பேசுகையில், தமிழ்நாட்டில் இப்போது பல இடங்களில் பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் மின் வெட்டு அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதை நிவர்த்தி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகிக்கொண்டிருந்தது. அக்டோபர் மாதம் 1ம் தேதியில் இருந்து போதுமான காற்றே வீசவில்லை.
ஒரு மணிக்கு 15 கிலோ மீட்டர் என்ற அளவில் காற்று வீசினால்தான் காற்றாலை இயங்கும். அப்படி இயங்காத காரணத்தினால் நமக்கு 1,600 மெகாவாட் மின்சாரம் குறைவாக கிடைக்கிறது. இதனால் சில இடங்களில் மின்சார தட்டுப்பாடு உள்ளது. இந்த மின்சார தட்டுப்பாடு இன்னும் ஒரு சில நாட்களில் சரி செய்யப்படும் என்றார்.
பாமக எம்எல்ஏ தமிழரசு பேசுகையில், கிராமப்புற கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசு முன் வருமா என்று கேட்டார்.
அவருக்கு பதிலளித்த வீராசாமி, சில கோவில்களில் வருமானம் அதிகமாக உள்ளது. இது மட்டும் அல்லாமல் கடைகளையும் வைத்துள்ளனர். ஆண்டு வருமானம் ரூ. 1,000க்கும் குறைவாக உள்ள கோவில்களுக்கு இலவசமாகவும் மற்ற கோவில்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 1.50 வீதமும் மின்சார கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர வேறு சலுகைகள் மின்சார வாரியத்தால் வழங்க முடியாது என்றார்.
பாமக எம்எல்ஏ வேல்முருகன் பேசுகையில், துவக்கப்பள்ளி, நடுநிலை பள்ளிகளுக்கு மின்சாரம் குறைந்த கட்டணத்தில் வழங்க அரசு முன் வருமா என்று கேட்டார்.
இதற்கு பதில் தந்த ஆற்காடு வீராசாமி, கல்வி துறையில் இருந்து மின்சாரம் குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வரவில்லை. அப்படி வந்தால்கூட மின்துறையால் பரிசீலனை செய்ய முடியாத நிலையில் தான் இருக்கிறோம் என்றார்.
ஜிகே மணி பேசுகையில், கிராமப் புறங்களில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். அதேபோல் கிருஸ்துவ ஆலயங்கள், மசூதிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்றார்.
பதிலளித்த அமைச்சர் வீராசாமி, எந்த கிருஸ்துவ ஆலயத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1000க்கும் குறைவாக வருமானம் வருவதாக தகவல் இல்லை. அதேபோல் மசூதிகளுக்கும் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை கிடைக்கிறது என்றார்.
காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விடியல் சேகர் பேசுகையில், அனாதை இல்லங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினால் அங்குள்ளவர்களுக்கு வாழ்வளித்து போல் இருக்கும் என்றார்.
இதற்கு ஆற்காடு வீராசாமி பதிலளிக்கையில், அனாதை இல்லங்கள் நடத்துபவர்கள் பல நாடுகளில் இருந்து நிதியை பெற்றுத்தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு எல்லாம் இலவச மின்சாரம் வழங்கினால் மின்சார வாரியமே திவாலாகிவிடும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications