ஈழத் தமிழர்களுக்காக பிரதமர் வீடு முன் போராட்டம்- டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு
சென்னை:
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கைத் தமிழர்கள் கடந்த 30 வருடங்களாக சுயநிர்ணய உரிமைக்காக பல வழிகளில் போராடி வருகிறார்கள். எனினும் இந்த பிரச்சனை இன்னும் தீரவில்லை. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தமிழக அரசியல் கட்சிகள் அவ்வப்போது ஓங்கி குரல் கொடுப்பதும், அனுகூலம் ஏற்படாது என்று கருதும்போது ஆதரவு குரலை கைவிடுவதும் என இரட்டை போக்கை கடைபிடித்து வருகின்றன.
ஆட்சியில் உள்ளவர்கள், எதிர் கட்சியினர் எவரும் இலங்கை தமிழர் பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு மறைமுகமாக ராணுவ உதவிகள் செய்து வருகிறது. கடந்த 1983ம் ஆண்டு தமிழர்கள் எப்படிக் கொல்லப்பட்டார்களோ அதே போல் இப்போது அவர்களுக்கு இன்னல்கள் நடந்து வருகின்றன. அவர்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து உணவுப்பொருட்கள், மருந்துகளை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சனையைப் பற்றி வெளியேயும், வெளிநாடுகளிலும் பேசும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சட்டமன்றத்தில் பேச ெமளனம் சாதிப்பது வியப்பாக இருக்கிறது. பிரச்சனை பற்றி இப்போது பேசாமல் பிறகு எப்போது பேசப்போகிறார்கள்.
இலங்கை தமிழர்களை பாதுகாக்கவும், பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பது தொடர்பாகவும், தற்போது நடந்துவரும், சட்டமன்ற கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் இனிமேல் எந்த அரசியல் கட்சித் தலைவர்களாவது இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி வெளியே பேசினால் அவர்கள் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம். மக்களிடத்தில் அவர்களை அம்பலப்படுத்துவோம்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு தலையிடக்கோரி அடுத்த மாதம் நவம்பர் 6ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications