ஜீவஜோதி வீடு புகுந்து சூறையாடிய வழக்கு: 'அண்ணாச்சி' ராஜகோபால் விடுதலை!
சென்னை:
சென்னை வேளச்சேரியில் ஜீவஜோதி குடியிருந்தபோது அவரது வீடு புகுந்து சூறையாடியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்தும் சரவணபவன் அதிபர் ராஜகோபால் விடுதலையாகி விட்டார்.
ஜீவஜோதியின் முதல் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சிக்கி ராஜகோபால் முதலில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் மீது இரு வழக்குகள் தொடரப்பட்டன.
அதில் ஒன்று வேதாரண்யம் அருகே உள்ள ஜீவஜோதி வீட்டுக்குச் ெசன்று ஜீவஜோதியையக் கடத்த முயன்றதாக வேதாரண்யம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு. இன்னொன்று, பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்பட்ட சமயத்தில் வேளச்சேரியில் ஜீவஜோதி வசித்து வந்த வீட்டிற்கு அடியாட்களுடன் சென்று வீட்டை சூறையாடியதாக சைதாப்பேட்டை கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.
வேதாரண்யம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கிலிருந்து ஏற்கனவே ஜீவஜோதி ஆகியோரின் பிறழ் சாட்சியம் காரணமாக ராஜகோபால் விடுதலையாகி விட்டார்.
அதேபோல வீடு சூறையாடப்பட்ட வழக்கிலிலும் ஜீவஜோதி தரப்பு பிறழ் சாட்சியம் அளித்ததால், வழக்கு ராஜகோபாலுக்கு சாதகமாக மாறியது. நேற்று இந்த வழக்கு நீதிபதி பெஞ்சமின் முன்பு விசாரணைக்கு வந்தது.
வீட்டின் உரிமையாளரான சந்திரன், ஜீவஜோதியின் தம்பி ராம்குமார் ஆகியோர் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கிலிருந்து ராஜகோபால் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications