ராணுவத் தாக்குதலில் 17 விடுதலைப் புலிகள் பலி

Subscribe to Oneindia Tamil


கொழும்பு:

மன்னார் மற்றும் வவுனியாவில் நடந்த கடும் சண்டையில் 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அரசுத் தரப்பில் உள்ள பகுதியையும், புலிகள் வசம் இருக்கும் பகுதியையும் பிரிக்கும் எல்லைப் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இந்த மோதலில் எட்டு விடுதலைப் புலிகள் இறந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

அதேபோல, வவுனியாவில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 8 புலிகள் கொல்லப்பட்டனர். நான்கு வீரர்கள் காயமடைந்தனர். யாழ்ப்பாணத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தில் ஒரு விடுதலைப் புலி கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த சம்பவங்களை விடுதலைப் புலிகள் தரப்பில் உறுதிப்படுத்தி கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+