ஐரோப்பாவின் அதிபர் பதவிக்கு பிளேர் நிறுத்தம்?
லண்டன்:
ஐரோப்பிய யூனியன் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐரோப்பிய அதிபர் பதவிக்கு இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோணி பிளேர் நிறுத்தப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்தில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் புதிதாக ஐரோப்பிய அதிபர் என்ற புதிய பதவியை உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்தப் பதவிக்கு இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோணி பிளேர் நிறுத்தப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் தலைவர்களில் பெரும்பாலானோர் பிளேருக்கு ஆதரவாக உள்ளனர்.
பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி கூறுகையில், பிளேர் மிகவும் குறிப்பிடத்தக்க நபர் என்று கூறி அவரை அதிபர் பதவிக்கு நிறுத்தலாம் என பரிந்துரைத்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் தற்போது உள்ள தலைவர் பதவி சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. 6 மாதம் வரை தலைவர் பதவியின் பதவிக்காலம் உள்ளது. தற்போது இதை மாற்றி புதிதாக அதிபர் பதவியை உருவாக்கி, இரண்டரை காலம் அந்தப் பதவியின் ஆயுட்காலத்தை நீட்டித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவிக்குத்தான் தற்போது பிளேர் நிறுத்தப்படவுள்ளார். இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனும், பிளேருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தப் பதவிக்கு பிளேர் மிகவும் பொருத்தமானவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் புதிய பதவிக்கான ஒப்புதலை இன்னும் ஐரோப்பிய யூனியன் வழங்கவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது. அதன் பின்னரே பிளேர் அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது தெரிய வரும்.
இருப்பினும் பிளேருக்கு ஒரு தரப்பு ஆதரவு தராது என்ற கருத்தும் நிலவுகிறது. ஈராக்கில் அமெரிக்கா ஊடுறுவியபோது, அதை எதிர்த்த ஐரோப்பிய நாடுகளைக் கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக ஜார்ஜ் புஷ்ஷை ஆதரித்தவர் பிளேர் என்ற கரும்புள்ளி பிளேர் மீது இன்னும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பதவிக்கு பிளேர் தவிர, போலந்து முன்னாள் அதிபர் அலெக்சாண்டர் வாசினெவ்ஸ்கி மற்றும் அயர்லாந்து பிரதமர் பெர்டி அஹெர்ன் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications