பொள்ளாச்சி நா.மகாலிங்கத்திற்கு உலகப் பெரும் தமிழர் விருது
திருப்பூர்:
உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பாக வரும் 28ம் தேதி திருப்பூரில் நடக்கவுள்ள மாநாட்டில் தொழிலதிபர், கல்வியாளர், அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்திற்கு உலகப் பெரும் தமிழர் விருது வழங்கப்படுவதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
உலகத் தமிழர் பேரமைப்பின் 5வது ஆண்டு நிறைவு விழா மற்றும் தமிழர் தொழில் வணிக சிறப்பு மாநாடு ஆகியவை வரும் 28ம் தேதி திருப்பூரில் உள்ள ஆர்.வி.குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைக்கிறார். உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை உரை நிகழ்த்துகிறார்.
இது தவிர தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு சுதேசி குளிர்பான உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பொடாரன் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாலையில் நடக்கவிருக்கும் உலக பெருந் தமிழர் விருது வழங்கும் விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த மாநாடு குறித்து பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது,
உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்குள் ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதே இந்த மாநாட்டின் தலையாய நோக்கம் ஆகும்.
ஒவ்வொரு நாட்டிலும் வாழக்கூடிய தமிழ் தொழில் வர்த்தகர்களுக்கு வெவ்வேறு வகையான பிரச்சனைகளைகள் உள்ளது. இது குறித்து விவாதித்து தீர நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய்வதே இதன் நோக்கமாகும்.
வருடம் தோறும் உலக தமிழர் பேரமைப்பு மாநாட்டில் உலக பெரும் தமிழர் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த தொழில், கல்வி, தமிழ் தொண்டு ஆகியவற்றில் சாதனை புரிந்த அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்திற்கு விருது வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications