திருவல்லிக்கேணியில் மேன்சன் மேலாளர் கொலை: ஓரினச் சேர்க்கையால் விபரீதம்
சென்னை:
ஓரினச் சேர்க்கைக்கு வாலிபரை கட்டாயப்படுத்திய திருவல்லிக்கேணி மேன்சன் மேலாளர் கொலை செய்யப்பட்டார்.
திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள ஜூபிடர் மேன்சனில் மேலாளராக இருந்தவர் ஜிம்மா கான் (வயது 45). ராமநாதபுரத்தை சேர்ந்த வி.என்.எஸ்.மேன்சனில் தங்கி இருந்தார்.
ஜூபிடர் மேன்சனில் ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த வீரேந்திர குமார் ரெட்டி (19) என்ற வாலிபர் இருந்தார். பாஸ்போர்ட் எடுத்துத் தரும் ஏஜெண்டாக இருந்த இவர் மாத வாடகை தராமல் இருந்து வந்தார்.
ஜிம்மா கானுக்கு ஓரினச் சேர்க்கை பழக்கம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. வீரேந்திர குமார் ரெட்டியுடன் அவருக்கு ஓரினச் சேர்க்கை இருந்து வந்தது.
இந் நிலையில் நேற்று இரவும் ரெட்டியை தனது அறைக்கு அழைத்துச் சென்றார் ஜிம்மா கான். இருவரும் மது அருந்தினர். இந் நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இந் நிலையில் ரெட்டி கத்தியால் ஜிம்மா கானை தாக்கினார். இதில் கழுத்தில் கானுக்கு குத்து விழுந்தது. கை விரலும் துண்டான.
கழுத்திலிருந்து அதிக ரத்தம் வெளியேறியதில் அந்த இடத்திலேயே கான் இறந்தார். இதையடுத்து பக்கத்து அறையில் இருந்தவர்கள் ரெட்டியை பிடித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தகவல் அறிந்ததும் இணை கமிஷனர் பாலசுப்பிரமணியம், துணை கமிஷனர் ராம சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
வீரேந்திர குமார் ரெட்டியை கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரிடம் ரெட்டி கூறுகையில்,
ஜிம்மா கானுக்கு ஓரினச் சேர்க்கை பழக்கம் உண்டு. அவரிடம் பார்த்து நடந்து கொள் என விடுதி நண்பர்கள் என்னை எச்சரித்தனர். ஆனால் அவரைப் பற்றி நான் அப்படி நினைக்கவில்லை. இதனால் நட்புடன் பழகினேன்.
அவர் என்னை அடிக்கடி மது அருந்தவும் உணவு உண்ணவும் அழைத்துச் செல்வார். வழக்கம்போல நேற்று இரவும் அவரது அறையில் மது அருந்தினோம். சாப்பிட்டு விட்டு நான் புறப்பட்டபோது ஓரின சேர்க்கைக்கு அழைத்தார்.
நான் மறுத்தும் விடவில்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. எனது மானத்தை காப்பாற்றிக் கொள்ளவே கத்தியால் அவரை குத்தினேன் என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications