தமிழகம் முழுவதும் கன மழை!!
சென்னை: வட கிழக்குப் பருவ மழையின் முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
வட கிழக்கு பருவ மனை ஓரிரு நாட்களில் தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது.
குறிப்பாக மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. மதுரையில் நேற்று மாலை முதல் பெய்த கன மழையால் நகரின் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது.
விருதுநகரில் பெய்த கனத்த மழையால் புறவழிச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் பெய்த கனமழையால், திருப்பத்தூரில் 2 பேர் மின்னல் தாக்கி பலியானார்கள்.
தலைநகர் சென்னையில் நேற்று போலவே இன்றும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சாரல் மழை போல தூறல் போட்டு வருவதால் நகரே குளிர்ந்து போய்க் காணப்படுகிறது.
மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications