நெல்லையில் ரூ. 9 லட்சம் மோசடி: 14 பேர் மீது வழக்கு
திருநெல்வேலி: நெல்லையில் போலி ஆவணங்கள் மூலம் கோவில் பணத்தை மோசடி செய்த ஓய்வு பெற்ற தாசில்தார் உட்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலனியில் வரசித்தி விநாயகர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இதே பகுதியை சேர்ந்த முத்தையா, இந்த கோவிலின் டிரஸ்ட் உறுப்பினராக இருந்து வருகிறார்.
முத்தையா, கோவில் டிரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் ஆடிட்டர் ஆகியோர் கோவில் கணக்குகளை சரி பார்த்தனர். அப்போது போலி ஆவணங்கள் மூலம் கோவில் பணம் சுமார் 9 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த மோசடியில் கோவில் டிரஸ்டின் முன்னாள் உறுப்பினர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தற்போதுள்ள கோவில் டிரஸ்ட் பொறுப்பாளர்கள் இந்த மோசடி குறித்து நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திருமலையாண்டி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதன்பின்னர் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வரசித்தி விநாயகர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் டிரஸ்ட் முன்னாள் உறுப்பினர்களான பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் வெங்கடாசலம், செல்வராஜ், தெட்சிணாமூர்த்தி, ராமசந்திரன், பாலசுப்பிரமணியன் வேலாயுதமூர்த்தி, ஜெகவீரராம பாண்டித்துரை, துரைரெங்கா, முத்துகுமாரசாமி, விஸ்வநாதன், சீனிவாசன், சுப்புலெட்சுமி, கோவில் அர்ச்சகர் குலசேகர பட்டர் சுப்பிரமணியன் ஆகிய 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications