ஆட்சிக்கு வந்தால் ராமரை பாஜக மறப்பது ஏன்?-கனிமொழி
தூத்துக்குடி:
ஆட்சி பொறுப்புக்கு வந்து விட்டால் ராமரை பாஜக மறந்து விடுவது ஏன் என திமுக ராஜ்யசபா எம்.பியான கனிமொழி கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடியில் இந்திய சமூக விஞ்ஞான கழகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது,
சேது சமுத்திர திட்டம் நிச்சயமாக நிறைவேறப் போகிற திட்டம். அந்த திட்டம் நிறைவேறுவதற்கு முதற்கட்டமாக இந்த கருத்தரங்கு நடக்கிறது என்று நினைக்கிறேன்.
இந்த திட்டத்தை எதிர்ப்பவர்களை 2 வகையாக எடுத்துக் கொள்ளலாம். ஒன்று அறிவுப் பூர்வமான கேள்விகளை கேட்பவர்கள். 2வது வகையினரைப் பற்றி உங்களுக்கே தெரியும். இதில் முதலாவது எதிர்ப்புக்கு நாம் பதிலளிக்க முடியும்.
பொருளாதார நன்மைகள், சுற்றுச்சூழல் குறித்து அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடை தேடலாம். இந்த திட்டம் பல்வேறு அமைப்புகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள 10 நிறுவனங்களின் அறிவியல் ஆராய்ச்சி அமைப்புகள் அறிவுரை வழங்கிய பின்னர் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ராமர் பாலத்தை இடிப்பதற்காக இந்த திட்டத்தை கொண்டு வரவில்லை. திமுகவுக்கோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளுக்கோ அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நிறைவேற்றப்படும் திட்டமும் அல்ல இது. மக்கள் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும்.
கடந்த பாஜக ஆட்சியில் தான் சேது சமுத்திர திட்டத்துக்கு கையெழுத்து போடப்பட்டுள்ளது. மதத்தின் பெயரால், ராமரின் பெயரால் கட்சியை வளர்த்து கொண்டிருக்கும் நீங்கள் ஏன் அப்போது ராமரை மறந்து விட்டீர்கள். ஆட்சி பொறுப்புக்கு வந்து விட்டால் ராமரை மறந்து விடுவீர்களா?
இந்த கால்வாயில் பெரிய கப்பல் செல்ல முடியாது என்று கேள்வி எழுப்புகிறார்கள். இது நியாயமான சந்தேகம். உலகில் 2 சதவீத கப்பல்கள் மட்டுமே அதிக எடையுள்ள கப்பல்களாக உள்ளன. மீதமுள்ள 98 சதவீத கப்பல்கள் செல்ல என்ன தேவையோ அதனை முதலில் நிறைவேற்ற வேண்டும்.
இந்த கால்வாயில் செல்லும் போது வேகம் குறையும். இதனால் எரிபொருள் செலவு அதிகமாகும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த திட்டம் நிறைவேறுவதால் பயண தூரம் வெகுவாக குறையும். இதனால் அதிக அளவிலான எரிபொருள் சேமிக்கப்படும். இதுபோன்ற கேள்விகளை முன் வைத்தால் பதில் அளிக்க முடியும் என்றார் கனிமொழி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications