கடலூர்- வகுப்பறையில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய மாணவி
கடலூர்: கடலூரில் பிளஸ் 2 மாணவி வகுப்பறையில் வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். அவரை யாரோ கொலை செய்து தூக்கில் மாட்டியதாகத் தெரிகிறது.
முந்திரி வியாபாரியான ராதாகிருஷ்ணன் என்பவரின் மகள் ஆனந்தி (17). இவர் கடலூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்தார்.
காலையில் மாணவிகள் விடுதி அருகே உள்ள வகுப்பறைகளில் சென்று படித்துக் கொண்டிருந்தனர். இந் நிலையில் ஒரு வகுப்பறையின் மின் விசிறியில் ஆனந்தி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரது வாயில் துணி திணிக்கப்பட்டிருந்தது. அவரது துப்பட்டா உடலுக்குக் கீழே கிடந்தது. இச் சம்பவத்தால் பள்ளியில் பெரும் திகில் பரவியுள்ளது.
வாயில் துணி திணிக்கப்பட்டுள்ளதால் அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிப்படுகிறது.
சம்பவம் குறித்து அறிந்த அப் பகுதியில் பள்ளி மீது திடீர் தாக்குதல் நடத்தினர். வகுப்பறைகள், விடுதிகளில் நுழைந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
மேலும் மாணவி ஆனந்தியின் உறவினர்களும் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப் பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு ஆனந்தியின் மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய ஆனந்தியின் சகோதரிகளான ஆனந்தவள்ளி (19), அம்சவள்ளி(15) ஆகியோரும் இதே விடுதியில் தான் தங்கி படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications