தஞ்சையில் ராஜராஜ சோழன் சதய விழா!
![]() |
| Click here for more images |
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் விழா சதய விழாவாக கொண்டாடப்படுகிறது.
ராஜராஜ சோழனின் 1022வது சதய விழா பெரிய கோயிலில் கடந்த 21ம் தேதி தொடங்கியது.
இந்த விழாவில் இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே தொடக்க உரையாற்றினார். மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம், வணிகவரித் துறை அமைச்சர் உபயதுல்லா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
புலவர்களுக்கு மாமன்னன் ராசராசன் விருதுகளை பழனி மாணிக்கம் வழங்கினார்.
மாமன்னன் ராஜராஜ சோழன் தங்கள் ஜாதியை சேர்ந்தவர் என்று கள்ளர் சமூகத்தினரும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் சதய விழாவையொட்டி தேவேந்திர குல வேளாளர் மாணவர் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் பாண்டியன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேரணியாக வந்து மன்னரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அதே போல ராஜராஜ சோழன் கல்வி மற்றும் பண்பாட்டு கழகம் என்ற கள்ளர் சமூகத்தினரின் அமைப்பின் சார்பில் கணேசன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவில் கவியரங்கம், இசை கச்சேரி போன்ற பல நிகழ்சிகள் நடைபெற்றன.
மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே கோவிலின் பரம்பரை அறங்காவலராக உள்ளார். அவரை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என சில அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி இருந்ததால் பரபரப்பு நிலவியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications