லாரி ஸ்டிரைக்: 1 கோடி முட்டைகள் தேக்கம்
நாமக்கல்: கேரளாவில் லாரி ஸ்டிரைக் தீவிரமடைந்திருப்பதால் தொடர்வதால் நாமக்கல் மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு அனுப்பபட வேண்டிய சுமார் ஒரு கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இவை அழுகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுளளனர். இதற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் கேரளா முழுவதும் லாரிகள் ஓடவில்லை. தமிழகத்திலிருந்தும் லாரிகள் கேரளாவுக்கு செல்லவில்லை.
இதன் காரணமாக கேரளாவுக்கு செல்ல வேண்டிய காய்கறிகள், முட்டைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் செல்வது தடைபட்டுள்ளது. இந்த ஸ்டிரைக் காரணமாக தமிழக வர்த்தகர்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு லாரிகள் மூலம் முட்டைகள் அனுப்பப்படுகின்றன. ஆனால் ஸ்டிரைக் காரணமாக முட்டைகளை அனுப்ப முடியாததால் கிட்டத்தட்ட 1 கோடி முட்டைகள் தேக்கமடைந்துளளன. இந்த முட்டைகள் அழுகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும் நஷ்டத்தை முட்டை உற்பத்தியாளர்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஸ்டிரைக்கை கைவிட வேண்டும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் விடுத்த எச்சரிக்கையை கேரள மாநில லாரி உரிமையாளர்கள் நிராகரித்து விட்டனர். மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications