இறால் பண்ணை காவலாளியை கொலை செய்தவர் கைது!
நாகை: நாகை அருகே இறால் பண்ணை ஊழியரை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் சோழவித்யாபுரம் பகுதியை சேர்ந்தவர் கலைவண்ணன். இவர் நாகை அருகில் உள்ள பூவத்தடியில் உள்ள ஒரு தனியார் இறால் பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
இந் நிலையில் டாடா சுமோ காரில் வந்த ஒரு மர்மக் கும்பல் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. கலைவண்ணணை கொன்றவர்கள்ளை கண்டு பிடிக்க இரண்டு தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டன.
இந் நிலையில் பக்கத்து பண்ணையில் வேலை செய்யும் குருநாதன் என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் குருநாதன் அளித்த வாக்குமூலத்தில்,
கலைவண்ணண் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். இதனால் என் வீட்டிற்கு அடிக்கடி வருவார். ஆனால், என் மனைவி அனுசயாவுடன் அவருக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். எனது நண்பர்களுடன் சென்று அவரது தலையில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தேன் என்று வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications