பாலியல் கல்விக்கு பாடத் திட்டம் தயார்!
சென்னை: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாலியல் கல்விக்கான பாடத் திட்டம் தயாராகியுள்ளது. எப்படி இந்தப் பாடத்தை நடத்த வேண்டும் என்று தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது. இதை அறிவியல் பாடம் போலவே நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பள்ளிப் பாடத்தில் பாலியல் கல்வியை சேர்ப்பது குறித்து சில தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளதால், மூத்த பாஜக தலைவர் வெங்கையா நாயுடு தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர் குழு நாடு முழுவதும் ெசன்று ெபாதுமக்கள், மாணவ, மாணவியர், ஆசிரியர்களை சந்தித்து கருத்தறிந்து வருகிறது.
இதுவரை சென்ற மாநிலங்களில் 11 மாநிலங்களில் பாலியல் கல்விக்கு எதிர்ப்பு இருப்பதாக வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இருப்பினும், செக்ஸ் கல்வி அவசியம்தான் என்ற குரலும் ஒருபக்கம் பலமாக எழுந்துள்ளது. இதனால் அரை குறையாக தெரிந்து ெகாள்ளும் ஆபத்திலிருந்து மாணவ, மாணவியரை மீட்க முடியும், தவறுகளை தவிர்க்க முடியும் என்பது அவர்களின் வாதம்.
இந்த நிலையில் தமிழகம் மற்ற மாநிலங்களை முந்திக் கொண்டு பாலியல் கல்விக்கான பாடத் திட்டத்தை வகுத்து விட்டது, அமல்படுத்த தயார் நிலையில் உள்ளது.
எந்தவித விரசமான விஷயங்களும், நெளியும் வகையிலான விஷயங்கள் இல்லாமல் பக்காவாக பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாம். இதுவும் அறிவியலைப் போலவே ஒரு பாடத் திட்டமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இதனை செக்ஸ் கல்வியாக இல்லாமல் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு, பாலியல் தொடர்பான நோய் ஆபத்துக்கள் பற்றிய பாடமாக போதிக்கப்பட இருக்கிறது. இதில் அறிவியல் ரீதியான பாடத்திட்டங்கள் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும். செக்ஸ் பற்றிய விளக்கங்கள் எதுவும் இடம் பெறாத வகையில் பாடம் நடத்தப்படும்.
இந்தப் பாடத்திட்டம் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே நடத்தப்படும். இரு பிரிவினருக்கும் தனித்தனியே விளக்கப் பாடம் நடக்கும்.
9-ம் வகுப்பு பிரிவினருக்கு புதன்கிழமையும், பிளஸ்-1 பிரிவினருக்கு வியாழக்கிழமையும் என வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பாடம் நடத்தப்படும்.
மற்ற வகுப்புகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு செக்ஸ் கல்வி பாடம் கிடையாது. பாடத் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாகவும், ஒரு வாரத்தில் ரெடியாகி விடும் எனவும் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செக்ஸ் கல்வி பாடத்தை மிக எளிமையாகவும், ஆரோக்கியமான முறையிலும் சொல்லித் தர 500 ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் ஏற்கனவே இதற்காக பயிற்சி பெற்றவர்கள்.
தற்போது இவர்கள் மூலம் 40 ஆயிரம் ஆசிரியர், ஆசிரியை களுக்கு பாலியல் கல்வி பாடத்தை எப்படி நடத்துவது என்று பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் 3 நாட்கள் இந்தப் பயிற்சி நடைபெறும். இதை முடித்த பின்னர் அனைத்து ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் இந்தப் பயிற்சி கொடுக்கப்பட்டு விடும்.
தமிழகத்தில் உள்ள 9 ஆயிரத்து 500 பள்ளிகளில் இந்தப் பாடத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications