'டெலஹ்கா ஆபரேஷன்': காங்கிரஸ் நடத்திய நாடகம்- பாஜக
டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாக டெஹல்கா இதழ் நடத்திய 'ஸ்டிங் ஆபரேஷன்' காங்கிரஸ் கட்சியின் சதிச் செயல். தேர்தலில் ஆதாயம் பெற இந்த நாடகத்தை டெஹல்கா உதவியுடன் காங்கிரஸ் நடத்தியுள்ளது என்று பாஜக கூறியுள்ளது.
குஜராத் கலவரம் குறித்து டெஹல்கா இதழ் நடத்தியுள்ள ஸ்டிங் ஆபரேஷன் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், இது காங்கிரஸ் கட்சியின் சதி, திட்டமிட்ட நாடகம். குஜராத் சட்டசபைத் தேர்தலில் ஆதாயம் பெற டெஹல்காவை காங்கிரஸ் பயன்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் காங்கிரஸ் கட்சியின் புலனாய்வு பிரிவாக தெஹல்கா மாறியுள்ளது.
இது ஒரு ஜனநாயக நாடு. உச்சநீதிமன்றமும், நானாவதி கமிஷனும் இந்த வழக்கை ஏற்கனவே தெளிவாக ஆராய்ந்து தீர்ப்பு கூறி விட்டன.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தை எப்படி முன்னேற்றுவது என்ற சிந்தனையில்தான் இருக்கிறார். ஆனால் அவரது அரசியல் எதிரிகள் மதவாதத்தைத் தூண்டி விடும் செயலில் இறங்கியுள்ளனர். இந்த சதியை வாக்காளர்கள் புரிந்து கொள்வார்கள் என்றார் ஜாவேத்கர்.
குஜராத் பாஜக கண்டனம்:
இதேபோல குஜராத் பாஜகவும் தெஹல்காவின் நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியின் சதி என்று கூறியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி புகார் கொடுக்கப் போவதாகவும் அது கூறியுள்ளது.
குஜராத் அரசுக்கு எதிராக அவதூறான எண்ணத்தை உருவாக்க தெஹல்காவை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இது நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்மறையாக மாறும். தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சியின் செயலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
குஜராத் கலவரம் முடிந்து ஐந்து ஆண்டுகளாகி விட்டது. அதன் பிறகு மோடி அரசின் தலைமையின் கீழ் குஜராத் மக்கள் நிம்மதியாக உள்ளனர். எந்தக் கலவரமும் அதன் பின்னர் ஏற்படவில்லை. இந்த நிலையில் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில், இப்படி ஒரு நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியும், தெஹல்காவும் மேற்கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று குஜராத் பாஜக தெரிவித்துள்ளது.
மோடியை கைது செய்ய லாலு கோரிக்கை:
இதற்கிடையே குஜராத் மதக் கலவரம் தொடர்பாக மோடியையும் பாஜக தலைவர் அத்வானியையும் கைது செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ரயில்வே அமைச்சரும், ராஷ்டிரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications