தொடர்ந்து கன மழை-மக்கள் அவதி, போக்குவரத்தும் பாதிப்பு
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல நகரங்களில் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கிராமப் பகுதிகளில் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் கன மழை பெய்ததால், வைகை அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது. முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் அங்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தஞ்சையிலும் இதே நிலைதான்.
சென்னை நகரில் மழையால் முக்கியச் சாலைகள் அனைத்தும் கணிசமான சேதத்தை சந்தித்துள்ளன. பள்ளம் ஏற்பட்டு அதில் மழை நீர் தேங்கிக் கிடப்பதால் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. வாகனங்களில் செல்வோர் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
வேளச்சேரி பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்து வீடுகளைச் சுர்றிலும் தேங்கிக் கிடப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வேலூரில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து பல பகுதிகளை நாறடித்துள்ளது.
தூத்துக்குடியில் மழை நீருடன் சாக்கடை நீர் சேர்ந்து வருவதைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாக்கடைகளில் மீன்பிடித்துப் போராட்டம் நடத்தினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications