தூத்துக்குடியில் 1,600 மெகாவாட் புதிய மின் நிலையம்
சென்னை: தூத்துக்குடியில் 1,600 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியமும், பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனமும் (பிஎச்இஎல்) இணைந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1,600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. முதல்வர் கருணாநிதி, மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் மோகன்தேவ், தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா, பிஎச்இஎல் தலைவர் அசோக் பூரி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரு மின் உலைகள் உடன்குடியில் அமைக்கப்படும்.
இத்திட்டத்தில் உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் குறைந்த அளவில் நிலக்கரி பயன்படுத்தப்படும்.
2011ம் ஆண்டில் இத்திட்டம் செயல்படத் தொடங்கும். உடன்குடி கிராமத்தில் 938 ஏக்கர் பரப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இந்த மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. கடற்கரையை ஒட்டியே இத்திட்டம் அமையவுள்ளதால், இதன் அருகிலேயே நிலக்கரியைக் கையாளுவதற்குத் தேவையான துறைமுகம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications