சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை-தடுக்க கடும் சட்டம்
திருநெல்வேலி: சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க கடும் சட்டம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து வருவதாக தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா கூறியுள்ளார்.
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டுபிடிப்பது மற்றும் தடுப்பது குறித்து ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு அமைச்சர் பூங்கோதை தலைமை வகித்தார். மருத்துவமனை டீன் விநாயகம் முன்னிலை வகித்தார். கருத்தரங்கை துவக்கி வைத்து அமைச்சர் பூங்கோதை பேசியதாவது,
குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைகள் உலகம் முழுவதும் நிலவிவரும் ஒரு பிரச்சனையாகும். ஆரம்ப காலம் முதலே இது போன்ற பிரச்சனைகள் இருந்து வருகிறது. தற்போது மக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சனைகள் மூலம் குழந்தைகள் பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் இப்பிரச்சனை தற்போது அதிகமாக உள்ளது. காரணம் பாலியல் கல்வி குறித்து நாம் பேச தயங்குகிறோம்.
இவ்வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து கடுமையான சட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமும் சமூக அக்கரையுடன் செயல்பட வேண்டும். நடந்த பின் ஆராய்வதை விட நாம் வரும் முன்காப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு முதல்வரின் தனிப்பிரிவு அமைப்பதற்கான ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications