5 ரேடியோ நிறுவனங்களுக்கு இலங்கை அரசு திடீர் தடை
கொழும்பு: விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்த செய்தியை ஒலிபரப்பிய ஐந்து ரேடியோ நிறுவனங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
இந்த ரேடியோ நிறுவனங்கள் அனைத்தும் ஏபிசி குழுமத்திற்குச் சொந்தமானவை.
இதுகுறித்து இலங்கை செய்தித்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சனா யப்பா கூறுகையில், ஏபிசி குழுமத்தைச் சேர்ந்த இந்த ஐந்து ரேடியோ நிறுவனங்களும் தவறான தகவல்களைப் பரப்பியதாக தகவல்கள் வந்தன.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமம் திரும்பப் பெறப்பட்டது. ஐந்து ரேடியோ நிறுவனங்களின் ஒலிபரப்பும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏபிசி நிறுவனத்தின் ரேடியோ நிறுவனங்கள், இலங்கையின் தெற்கில் உள்ள திச்சமஹரமா என்ற இடத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக செய்தி ஒளிபரப்பின.
இதையடுத்து அங்கு ராணுவமும், போலீஸாரும் விரைந்தனர். ஆனால் உண்மையில் அங்கு எந்த வித தாக்குதலும் நடைபெறவில்லை என்று தெரிய வந்தது.
இதையடுத்து தவறான செய்தியை ஒலிபரப்பியதற்காக இந்த ரேடியோ நிறுவனங்களின் ஒலிபரப்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமைச்சர் ஒருவர் தன்னை செய்தித்தாள் ஒன்றின் செய்தியாளர் மிரட்டுவதாக கூறிய புகாரின் பேரில் அந்த செய்தியாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த இரு சம்பவங்களையும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன. பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கும் செயல் இது. தங்களுக்கு எதிராக எழும் குரல்களை ஒடுக்க அரசு முயல்வதையே இது காட்டுகிறது ென்று சுதந்திர மீடியா இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுனந்தா தேசப்ரியா கூறியுள்ளார்.
தங்கள் மீதான பெரும்பாலான தாக்குதல்களை ராணுவம் இருட்டடிப்பு செய்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications