அதிமுக எம்பியிடம் நூதன கொள்ளை
திருச்சி: ஜவுளி எடுக்க வந்த அதிமுக எம்பியிடம் சூட்கேஸ் திருடப்பட்டது.
அதிமுகவின் ராஜ்யசபா எம்பி இளவரசன். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் உள்ள ஒரு பிரபல கடைக்கு துணி எடுக்க வந்தார்.
தனது சூட்கேஸை காரில் வைத்து விட்டு துணிமணிகளை எடுத்த பின்னர் தனது காருக்கு திரும்பினார். அப்போது அங்கு வந்த ஒருவன், 10 ரூபாய் நோட்டுகளை கீழே போட்டுவிட்டு, 'சார் இந்த பணமெல்லாம் உங்களுடையதா' என்று கேட்டுள்ளான்.
பணத்தை பார்த்த அவர் அதை குனிந்து கீழே எடுக்கும் முன், காருக்குள் இருந்த சூட்கேஸை அந்த ஆசாமி திருடிச் சென்றான். எம்பி இளவரசன் பணத்தை பொறுக்கிய பின் காருக்குள் திரும்பிப் பார்த்தபோது தன் சூட்கேஸை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இது தொடர்பாக போலீசில் புகார் செய்தார். திருச்சி நகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்த போலீசார் சூட்கேசுடன் தனியாக செல்லும் ஆசாமியை பிடித்து விசாரிக்கும்படி கூறினர்.
இந் நிலையில் தில்லைநகர் பகுதியில் ஒரு சூட்கேஸ் அனாதையாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதை கைப்பற்றிய போலீசார் திறந்து பார்த்த போது அதிமுக எம்பியின் அடையாள அட்டை, கிரடிட் கார்டு, விமான டிக்கெட் போன்றவை இருந்தன.
சூட்கேஸை திருடி சென்றவன் அதில் பணம் இல்லாததால் சூட்கேஸை எறிந்துவிட்டு சென்றுள்ளான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications