ஊசி போட்ட மாணவன் பலி-டாக்டர் தலைமறைவு
திருத்துறைப்பூண்டி: கை வலிக்காக வந்த மாணவருக்கு ஹோமியோபதி டாக்டர் ஊசி போட்டதில் அந்த மாணவர் சிறிது நேரத்திலேயே பலியானார். இதையடுத்து அந்த டாக்டர் தலைமறைவாகிவிட்டார்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள திருத்தங்கூரை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் குணசீலன் 10ம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன் ஒரு விபத்தில் குணசீலனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குணசீலன் சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மீண்டும் வலி ஏற்பட்டால் வீட்டின் அருகில் உள்ள டாக்டரிடம் ஊசி போட்டுக் கொள்ளுமாறு சில மருந்துகளை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் எழுதி கொடுத்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை குணசீலனுக்கு கையில் வலி ஏற்பட்டது. இதையடுத்து தந்தை மனோகரன் ஊசி மருந்தை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள ஹோமியோபதி டாக்டர் பிரகாசத்திடம் மகனை அழைந்துச் சென்றார்.
அங்கு குணசீலனக்கு ஊசி போட்ட பின்னர், தனது மகனை அழைத்து வந்து தனது கடையில் அமர வைத்திருந்தார்.
இந் நிலையில் குணசீலன் சிறிது நேரத்திலேயே மயங்கி விழந்து விட்டான். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மனோகரன், திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகனை கொண்டு சென்றார். ஆனால் அவனை பரிசோதித்த டாக்டர்கள் குணசீலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர்.
அதிர்ச்சி அடைந்த மனோகரன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து டாக்டர் தலைமறைவாகி விட்டார்.












Click it and Unblock the Notifications