ஜார்கண்டில் நக்சல்கள் சுட்டு 17 பேர் படுகொலை
ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய பயங்கர தாக்குதலில் முன்னாள் முதல்வரின் மகன் உட்பட 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜார்கண்ட் கிரிதி மாவட்டத்தில் உள்ள சில்காடியா என்னும் கிராமத்தில் கலைநிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த கலை நிகழ்ச்சியில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் பாபுலால் மாரண்டியின் மகன் அனுப் மாரண்டி கலந்து கொண்டார்.
இவருடன் சேர்ந்து இவரது ஆதரவாளார்கள் உட்பட ஏராளமானோர் இந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நேற்று நள்ளிரவு 1 மணியில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கலை நிகழ்ச்சியில் 30 பேர் கொண்ட நக்சல் தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் புகுந்து நிகழ்ச்சியை முன் வரிசையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
நக்சல் தீவிரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலையடுத்து கலை நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து நாலாப்புறமும் சிதறி ஓடினர். இதில் முன்னாள் முதல்வரின் மகன் அனுப்மாரண்டியை அவரது ஆதரவாளர்கள் தூக்கிக் கொண்டு ஓடினர்.
ஆனால் நக்சலைட்டுகள் கையெறி குண்டுகளை அனுப் மாரண்டி மீது வீசியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தார்.
இத் தாக்குதலில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20க்கும் மேற்பட்டவர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மேலும் 3 பேர் இறந்துவிட்டனர்.
தாக்குதல் நடந்த வந்த நக்ஸல்களில் மூன்று பேர் பெண்கள் ஆவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications