ஜாதி ரீதியாக சமுதாயத்தைப் பிரித்தவர் காந்தி: மாயாவதி
சண்டிகர்: சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த மக்களை இணைக்கப் பார்த்தவர் அம்பேத்கர். ஆனால் ஜாதி ரீதியாக சமூகத்தைப் பிரித்தவர் காந்தி என்று உ.பி. முதல்வர் மாயாவதி கூறியுள்ளார்.
சண்டிகர் வந்த மாயாவதி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், காந்தியும், அம்பேத்கரும் இரு வேறு பாதையில் நடந்தவர்கள். சமூகத்தில் நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த மக்களை ஒன்றுபடுத்தி இணைக்க முயன்றார் அம்பேத்கர்.
ஆனால் ஒடுக்கப்பட்ட நிலையில், உரிமைகளற்று கிடந்த மக்களுக்கு ஹரிஜன் என்ற பெயர் கொடுத்து சமூகத்தில் பிரிவினையை உருவாக்கியவர் காந்தி.
இரு தலைவர்களுக்கும் பல சிந்தனைகள் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், அம்பேத்கர் ஒருபோதும் சமுதாயத்தைப் பிரிக்க நினைத்ததில்லை. அந்த சிந்தனை அவருக்கு ஒருபோதும் வந்ததில்லை.
இதுதொடர்பாக பலரும் அம்பேத்கரை வலியுறுத்தினர், வற்புறுத்தினர். ஆனால் அனைத்து சமுதாயத்தினரும் சமமானவர்களே என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர் அம்பேத்கர். அப்படிப்பட்ட சமுதாயம்தான் வர வேண்டும் என்பதிலும் அவர் பிடிவாதமாக இருந்தார்.
காந்தியடிகள் உருவாக்கிய ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்) என்ற வார்த்தையே தவறானது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. இதனால்தான் நான் உ.பியில் ஆட்சிக்கு வந்ததும், அரசு அலுவலகங்களில் ஹரிஜன் என்ற வார்த்தையை நீக்கி விட்டு தலித் என்ற வார்த்தை மட்டுமே இடம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டேன் என்றார் மாயாவதி.
காந்தியடிகள் குறித்து மாயாவதி கூறியுள்ள இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications