நக்சல் தாக்குதல் 18 பேர் பலி: ஜார்க்கண்ட்டில் பந்த்
ராஞ்சி: முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் உள்ளிட்ட 18 பேர் நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியான சம்பவத்தைக் கண்டித்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் இயல்பு நிலை ஸ்தம்பித்தது.
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடித் மாவட்டத்தில் நடந்த நக்சலைட் தாக்குதலில் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனுப் உள்ளிட்ட 18 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலைக் கண்டித்து ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா சார்பில் இன்று பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் இயல்பு நிலை ஸ்தம்பித்துள்ளது. அனைத்துப் பகுதியிலும் பந்த் முழு அளவில் நடந்து வருகிறது. இருப்பினும் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாக தகவல் இல்லை.
அனைத்து சாலைகளும் வாகன ஓட்டமின்றி முடங்கியுள்ளன. ரயில்கள் ஓடவில்லை. பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நக்சலைட் தாக்குதல் நடந்த கிரிடித் மாவட்டத்திலும் அமைதியான முறையில் பந்த் நடந்தது.
லோஹர்தாகா என்ற இடத்தில் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியினர் அமைதி ஊர்வலம் நடத்தினர். இறுதியில், முதல்வர் மது கோடாவிந் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
தான்பாத், ஜாம்ஷெட்பூர், பொகாரோ, டால்டன்கஞ்ச், தும்கா, கொடெர்மா உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications