ராணுவத் தாக்குதலில் 11 விடுதலைப் புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: வவுனியா மாவட்டத்தில் நடந்த சண்டையில் 11 விடுதலைப் புலிகள் பலியாகி விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் விமான தளத் தாக்குதலுக்குப் பிறகு ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் நேற்று நான்கு இடங்களில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
இந்த சண்டைகளில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சண்டையில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வெளிஓயா என்ற இடத்தில் நடந்த சண்டையில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications