அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் விரைவாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
மழை காரணமாக ஆங்காங்கே மக்கள் பாதிக்கப்பட்டுள்ள விவரங்கள் தமது கவனத்துக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவுபடுத்திடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், மழை வெள்ளம் காரணமாக மனித உயிர்களுக்கும், கால்நடைகளுக்கும், பயிர் வகைகளுக்கும் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை மதிப்பிட்டு அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும், உடனடியாக மாவட்டங்களுக்குச் சென்று பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை வழங்குமாறு அமைச்சர்களுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் உத்தரவுப்படி, அமைச்சர்கள் பார்வையிடும் மாவட்டங்கள்:
தஞ்சை - கோ.சி.மணி, எஸ்.என்.உபையதுல்லா.
விழுப்புரம் - பொன்முடி.
கடலூர் - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.
கோவை - பொங்கலூர் பழனிச்சாமி.
காஞ்சிபுரம் - தா.மோ. அன்பரசன்.
கன்னியாகுமரி - சுரேஷ்ராஜன்.
ராமநாதபுரம் - சுப.தங்கவேலன்.
ஈரோடு - என்.கே.கே.பி.ராஜா.
நெல்லை - பூங்கோதை ஆலடி அருணா.
தூத்துக்குடி - கீதா ஜீவன்.
திருவள்ளூர் - கே.பி.பி.சாமி.
திருவாரூர், நாகை - உ.மதிவானன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications