தொழிலாளர்கள் கோஷ்டி மோதலில் 2 பேர் பலி
சென்னை: சென்னை அருகே வடமாநிலத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையை அடுத்துள்ள பீர்க்கண்கரணையில் ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனி இருந்த இடத்தில் தற்போது ஸ்ரீராம் குழுமம் சார்பாக மிகப்பெரிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டிடம் கட்டும் பணியை டெல்லியை சேர்ந்த கட்டட நிறுவனம் ஒன்று காண்ட்ராக்ட் எடுத்துள்ளது. இந்த நிறுவனம் ஒரிசா மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கட்டட பணிக்காக அமர்த்தியுள்ளது.
நேற்று நள்ளிரவில் ஒரிசாவை சேர்ந்த சுரேந்தர்மெளலி (40) என்பவர் குடிபோதையில், இரும்புக் குழாயை எடுத்து தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களை தாக்க ஆரம்பித்தார். இதில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி உம்பிரீஷ் மொண்டல் (45) படுகாயமடைந்தார்.
இதையடுத்து பீகார் மற்றும் ஒரிசாவை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் ஒருவரையொருவர் பாட்டில், கட்டை மற்றும் கற்களால் தாக்கிக் கொண்டனர்.
மோதல் பற்றிய தகவல் தெரிந்தவுடன் இன்ஸ்பெக்டர் தேவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் தலைமைக் காவலர்கள் ராம்குமார், முரளி ஆகியோர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதனப்படுத்த முயன்றனர்.
ஆனால் தொழிலாளர்கள் சமாதானம் செய்ய வந்த போலீசாரையும் தாக்கினர். இதில் நான்கு போலீஸாரும் காயமடைந்தனர். இதையடுத்து கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து கட்டடத் தொழிலாளர்களை அடக்கினர். பின்னர் காயமடைந்த நான்கு போலீஸாரும், தொழிலாளர்கள் சுரேந்தர் மெளலி, உம்பிரீஷ் மொண்டல், ராஜு, உம்ப்ரீஷ் பூரி ஆகியோரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இதில் மெளலியும், மொண்டலும் இறந்து விட்டனர். போலீஸார் உள்ளிட்ட மற்ற 6 பேரும் சிகிச்சை பெற்றனர்.
இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications