பாதியில் முடிந்த பாமக உண்ணாவிரதம்
திருநெல்வேலி: நெல்லையில் பாமகவினர் நடத்தவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் கூட்டம் சேராததால் பாதியிலேயே கைவிடப்பட்டது.
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் பாதிக்கப்பட்ட கூத்தன்குளி மீனவர்கள் தற்காலிக குடியிருப்புகளில் தங்கி உள்ளனர். இவர்கள் 70 குடும்பத்தினருக்கும் தற்போது தங்கியிருக்கும் இடத்தையே நிரந்தரமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அத்துடன் முக்கூடல் பேரூராட்சி சுகாதார வாளகத்தை மீண்டும் மகளிர் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மகளிர் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த இரு பிரச்சனைகளை முன்வைத்து பாமக மற்றும் கூத்தன்குளி மீனவர் சங்கம் சார்பில் பாமக மாநில மகளிர் சங்க செயலாளர் சிலம்பு செல்வி தலைமையில் நெல்லை வண்ணார்பேட்டையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் இரு நபர்கள் மட்டுமே வந்திருந்தனர். இதனால் உண்ணாவிரதம் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் அங்கு ஆட்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்தச் சூழ்நிலையில், கொஞ்சம் போல ஆட்கள் வரத் தொடங்கினர். உண்ணாவிரத பந்தலுக்குள் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். தொலைக்காட்சி மற்றும் புகைப்படக்காரர்களுக்கு உண்ணாவிரதம் இருப்பது போன்று போஸ் கொடுத்தனர்.
பின்னர் திடீரென அனைவரும் கலைந்து சென்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க வந்தவர்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் கலைந்து சென்றதால் கூடியிருந்த சொற்ப தொண்டர்களிடம் அதிருப்தி ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications