கொழும்பு டூ கோவைக்கு நாளை முதல் புது விமான சேவை
துபாய்: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை நகருக்கு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 29ம் தேதி (நாளை) முதல் புதிய விமான சேவையை தொடங்குகிறது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்தியாவில் விமான சேவையை மேற்கொள்ளும் 11வது நகரம் கோவை.
இதுகுறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் ஹில் கூறுகையில், இந்தியாவுக்கான நுழைவாயிலாக கொழும்பு நகரை நாங்கள் கருதுகிறோம். இதனால்தான் கொழும்பிலிருந்து இந்தியாவுக்கு அதிக விமான சேவையை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த பட்டியலில் தற்போது கோவையும் சேர்ந்துள்ளது. மேலும் பல இந்திய நகரங்களும் எங்களது சேவையில் இணையவுள்ளன.
தொடக்கத்தில் வாரம் நான்கு முறை (திங்கள், வியாழன், வெள்ளி, சனி) கொழும்பு - கோவை இடையே விமான சேவை மேற்கொள்ளப்படும். தென்னிந்தியாவில் ஏற்கனவே சென்னை, திருச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி ஆகிய நகரங்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சேவை உள்ளது என்றார் ஹில்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடந்த ஏப்ரல் 2006 - மார்ச் 2007 கால கட்டத்தில் 10 லட்சம் இந்திய பயணிகளுக்கு கையாண்டு சேவையாற்றியுள்ளதாகவும் ஹில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தங்களது ஊரைப் புறக்கணித்து விட்டு கோவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக, மத்திய அரசைக் கண்டித்து கோழிக்கோட்டில் நேற்று பொது வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. கோழிக்கோட்டில் உள்ள காரிப்பூர் விமான நிலையத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications