தூத்துக்குடியில் நள்ளிரவில் மீனவர்கள் திடீர் மறியல்
தூத்துக்குடி: மீன்பிடி உபகரணங்கள் வழங்கக்கோரி தூத்துக்குடியில் நள்ளிரவில் மீனவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே சுனாமி குடியிருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில் சுனாமியின் போது மிகவும் பாதிக்கப்பட்ட மீனவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 2ம் கட்டமாக மீன்பிடி வலைகள், காஸ் லைட்டர், சைக்கிள் உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது.
அதன்படி தூத்துக்குடியில் உள்ள மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்களுக்கு மாலையில் உபகரணங்கள் வழங்கப்படும் எனவும், அறிவிக்கப்பட்டது. ஆனால் டோக்கன் பெற்ற எவருக்கும் உபகரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே டோக்கன் கிடைக்காதவர்கள் தங்களுக்கும் டோக்கன் வழங்ககோரி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள கடற்கரை சாலையில் திடீரென்று அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மீனவர்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications