நந்திகிராம் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து பந்த்
கல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இன்று திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மேற்குவங்கத்தில் பந்த் அனுஷ்டிக்கப்பட்டது.
நந்திகிராமில் கடந்த வாரம் நடந்த பெரும் மோதல் மூண்டது, துப்பாக்கிச் சூடும் நடந்தது. இதில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மயிரிழையில் உயிர் தப்பினார். தன்னைக் கொல்ல முயற்சி நடந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்கம் முழுவதும் பந்த் நடத்த மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். இதையடுத்து இன்று பந்த் நடத்தப்பட்டது.
இதனால் மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மெட்ரோ ரயில் சேவைகள் பல இடங்களில் நிறுத்தப்பட்டன. ஹவுரா மற்றும் சீல்த் ஆகிய இடங்களுக்கு செல்லவேண்டிய ரயில்கள் இயங்கவில்லை. பல இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
ஆட்டோ, டாக்ஸி, பஸ், லாரி எதுவும் இயங்கவில்லை. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் எதுவும் திறக்கப்படாததால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பந்த்தால் ஏதும் அசம்பாவித சம்பவம் நிகழாமல் தடுக்க 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2001ம் ஆண்டு பந்த் நடத்தியதற்காக மம்தா பானர்ஜி மீது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் இன்னொரு பந்த்தை நடத்தியுள்ளார் மம்தா என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications