இலங்கை சுனாமி குடியிருப்பில் ராணுவம் குண்டுவீச்சு
முல்லைத்தீவு: இலங்கையின் முல்லைத் தீவு மாவட்டத்தில், சுனாமிக் குடியிருப்புகள் மீது இலங்கை விமானப்படை குண்டு வீசித் தாக்கியது. இதில் 2 தமிழ் இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
முல்லைத் தீவு மாவட்டம் தீர்த்தக்கரை என்ற கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு மொத்தம் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன.
இங்கு விமானப்படை வீரர்கள் திடீரென கேபிர் ரக விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் 3 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. 2 இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் இந்த சுனாமிக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு இங்கு சுனாமியால் வீடுகளை இழந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் இலங்கை விமானப்படை குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குண்டு வீச்சில் ரூபன் (18), சஜீவன் (20) ஆகிய இருவர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தமிழீழ போலீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
மொத்தம் 8 குண்டுகள் வீசப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications