புதுச்சேரி கட்டடத் தொழிலாளர்களுக்கு தீபாவளிப் பரிசு கூப்பன்
புதுச்சேரி: புதுச்சேரி கட்டடத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கும் தொழிலாளர்களுக்கு, தீபாவளிப் பரிசாக ரூ.500 மதிப்புள்ள பரிசு கூப்பன் அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து கட்டடத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் செயலாளர் சுந்தரேசன் கூறுகையில், கட்டடத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு தீபாவளி பரிசாக ரூ.500 மதிப்புள்ள பரிசுக் கூப்பன் நாளையிலிருந்து நவம்பர் 6ம் தேதி வரை கொடுக்கப்படும்.
இந்த கூப்பன் கிடைக்காதவர்கள், தீபாவளிக்கு பின்பும் கட்டடத் தொழிலாளர்கள் சங்க அலுவலக நேரத்தில் வந்து பெற்று கொள்ளலாம்.
நல வாரியத்தில் 11,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினசரி 2000 உறுப்பினர்கள் வீதம் அனைவருக்கும் தீபாவளி பரிசு கூப்பன் அளிக்கப்படும்.
ஆண்கள், பெண்களுக்கென தனித் தனியாக கூப்பன்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications