கன்னியாகுமரியில் ஏராளமான ரப்பர் மரங்கள் சேதம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழைக்கு பலியான 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 50,000 நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில மழை வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வு நடத்திய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் கூறுகையில்,
மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணம் வழங்குமாறு முதல்வர் கூறியுள்ளார். குமரி மாவட்டத்தை பொறுத்தளவு பெரியளவில் இதுவரை பாதிப்புகள் இல்லாமல் இருந்தாலும் தொடர்ந்து மழை பெய்ந்து வருவதால் மேலும் பாதிப்புகள் ஏற்படாதவாறு அனைவரும் உஷார் நிலையில் இருக்க வேண்டும்.
மழையால் உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் உடனே வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது மாவட்டத்தில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, என்பதை கேட்டறிந்தார்.
பத்மனாபபுரம் தொகுதியில் சங்கரன்காவு என்ற இடத்தில் 2 வீடுகளும், கிள்ளியூர் வேங்கோடு பகுதியில் ஏராளான வாழை மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
மேலும் திக்குறிச்சி, வெள்ளிக்கோடு, பாரதப்பள்ளி, பேச்சிப்பாறை பகுதியில் 800 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ரப்பர் பால் வெட்டும் மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மாவட்டத்தில் பெரிய பாதிப்புகள் இருந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications