கட்டாய திருமண பதிவு-முஸ்லீம் லீக் வரவேற்பு
சென்னை: அனைத்து மதத்தினரும் திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்றுள்ளது.
அக் கட்சியின் தலைவரும் எம்பியுமான காதர் மொய்தீன் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் உள்ள அனைத்து மதங்களை சேர்ந்தவர்களின் திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருட்டு திருமணம், பால்ய திருமணம், வாரிசு உரிமை, சொத்துரிமை உள்ளிட்டவற்றில் எவ்வித சர்ச்சையும் ஏற்படாமல் இருக்க திருமண பதிவு நிச்சயம் உதவும்.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடந்த பல ஆண்டுகளாக பிரச்சாரம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களை மையமாக கொண்டு இயங்கும் முஸ்லிம் அமைப்புகளான ஜமாத்துகள் திருமண பதிவு மையங்களாக விளங்குகின்றன.
தமிழகத்தில் உள்ள 11,000க்கும் மேலான ஜமாத்துக்களில் திருமணம் முறைப்படி பதிவு செய்யப்படுகிறது. இந்த முறையை பின்பற்றாமல் போட்டி ஜமாத்துக்களில், தர்ஹாக்களில் மறைமுக திருமணம் நடத்தி வைத்து வருபவர்களை தொடர்ந்து கண்டித்து வருகிறோம்.
உச்சநீதிமன்ற ஆணையை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம். இந்த ஆணை குறித்து 3 மாத காலத்தில் தமிழக அரசு விதிமுறைகளை அறிவிக்க உள்ளது. அப்போது முஸ்லிம் திருமணப் பதிவு பற்றிய விவரங்களை சேர்க்கும்போது அந்த சமுதாயத்தின் நடைமுறைகளை உன்னிப்பாக கவனித்து சேர்க்க வேண்டும்.
பல மாவட்டங்களில் ஹாஜிக்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். அவர்களை உடனடியாக நியமித்து திருமண பதிவு அதிகாரியாக அடையாளம் கட்ட வேண்டும். முஸ்லிம் திருமணங்கள் அனைத்தும் பதிவு பெற்றே நடக்கின்றன.
ஆனால் தமிழகம் அல்லாத வேறு மாநிலங்களில் ஹாஜிகள் சட்டம் அமுலில் இல்லாததால் முஸ்லிம் திருமண பதிவுகளில் ஒரே சீரான நிலை இல்லாதது போல் தோன்றுகிறது. எனவே மத்திய அரசு ஹாஜிகள் சட்டத்தை நாடு முழுவதும் பொருத்துமாறு சட்டமாக்க வேண்டும். இதற்கான முயற்சியை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மேற்கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications