நாளை சேலம் கோட்டம் உதயம்: பொள்ளாச்சியில் வைகோ உண்ணாவிரதம்
சேலம்&பொள்ளாச்சி: கேரளம் உருவாக்கிய ஏகப்பட்ட பிரச்சனைகளுக்குப் பின் அமைக்கப்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் முன்னிலையில் முதல்வர் கருணாநிதி நாளை தொடங்கி வைக்கிறார்.
சேலம் ரயில்வே காலனியில் உள்ள மைதானத்தில் நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் மாலை 4 மணிக்கு சேலம் கிழக்கு ரெயில்வே காலனி மைதானத்தில் நடக்கிறது.
இந்த கோட்டத்திற்காக தற்காலிக அலுவலக கட்டிடங்கள் மற்றும் சிக்னல் கட்டுப்பாட்டு அறை போன்றவை அமைக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் தொடக்கவிழா பணிகளை ரயில்வே இணையமைச்சர் வேலு நேற்றிரவு ஆய்வு செய்தார்.
சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு 862 கிலோ மீட்டர் ரயில் பாதை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் பணியாற்றுவதற்காக 341 பணியாளர்களுக்கு இடமாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டுவிட்டது.
ஆனால், கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி-கிணத்துக்கடவு ஆகிய தமிழக ரயில்வே பகுதிகள் (சுமார் 71 கி.மீ. ரயில் பாதை) கேரளத்தின் பாலக்காடு கோட்டத்துடன் இணைக்கப்பட்டுவிட்டன. இதை சேலம் கோட்டத்துடன் இணைக்க தமிழக தலைவர்கள் எடுத்த முயற்சிகளை கேரளம் முறியடித்துவிட்டது.
வைகோ உண்ணாவிரதம்:
இந் நிலையில் நாளை சேலம் கோட்டம் தொடக்கவிழா நடைபெறும் அதே நேரத்தில் பொள்ளாச்சி-கிணத்துக்கடவு ஆகிய ரயில்வே பகுதிகள் கேரளத்திற்கு தாரை வார்க்கப்பட்டதை கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளார்.
பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையம் அருகே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இதை மதிமுக பொருளாளர் கண்ணப்பன் தொடங்கி வைக்கிறார். இதில் மதிமுகவினர் கருப்புச் சட்டைகளுடன் பங்கேற்கவுள்ளனர்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications