கூட்டணி?: சரத்குமார்-கார்த்திக் திடீர் சந்திப்பு!
மதுரை: மதுரையில் நடிகர் கார்த்திக்கும், நடிகர் சரத்குமாரும் தனியே சந்தித்துப் பேசினர். கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகக் கருதப்படுகிறது.
தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் நடிகர் கார்த்திக் மற்றும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் வந்திருந்தனர்.
இந் நிலையில் மதுரையில் ஹோட்டலில் கார்த்திக்கை, நடிகர் சரத்குமார் திடீரென சந்தித்தார். இருவரும் சுமார் 1 மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பு குறித்து இருவரும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஆனாலும் கூட்டணி அமைப்பது குறித்தே இருவரும் பேசியதாகத் தெரிகிறது.
இதற்கிடையே நேற்றிரவு மதுரை நேதாஜி ரோட்டில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நூற்றாண்டு ஜெயந்தி விழா பொதுக்கூட்டத்தில் கார்த்திக் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏகப்பட்ட கூட்டம் கூடிவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் கார்த்திக் வரவில்லை.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. கார்த்திக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று நிர்வாகிகள் அறிவித்ததையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் கோஷம் போட்டபடி கலாட்டாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் தலையிட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர். கடைசி நேரத்தில் கார்த்திக் காலை வாருவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications