சவூதியில் 1.2 லட்சம் பாக். 'உம்ரா யாத்ரீகர்கள்' மாயம்!
இஸ்லாமாபாத்: சவூதிக்கு உம்ரா புனித யாத்திரை சென்ற 1 லட்சத்து 20 ஆயிரம் பாகிஸ்தான் யாத்ரீகர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
உம்ரா என்பது, வருடத்தின் எந்த நாளிலும் முஸ்லீம்கள் மெக்காவுக்கு புனித யாத்திரை மேற்கொள்வதாகும்.
இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டு மத விவகாரத்துறை செயலாளர் வக்கீல் அகமது கான் கூறுகையில், பாகிஸ்தானிலிருந்து கடந்த ஆண்டு உம்ரா புனித யாத்திரை சென்ற யாத்ரீகர்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இன்னும் நாடு திரும்பவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து சவூதி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளோம்.
இவ்வளவு பேர் காணாமல் போனதற்கு சவூதி நிர்வாகம்தான் பொறுப்பேற் வேண்டும். உம்ரா விசாக்களை இவர்கள் தவறாகப் பயன்படுத்தி சவூதி சென்றார்களா என்பது குறித்து தெரியவில்லை. அதுகுறித்து விசாரித்து வருகிறோம்.
சவூதி நிர்வாகம் அங்கீகரித்த ஏஜென்டுகள் மூலம்தான் விசாக்களை வழங்கி வருகிறது. எனவே இதில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை.
இத்தனை பேர் காணாமல் போனதற்கு பாகிஸ்தான் அரசு பொறுப்பாக முடியாது. சவூதி அரேபியாவில் காணாமல் போன பாகிஸ்தானியர்கள், சவூதி நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட ஏஜென்டுகள் மூலம் உம்ரா விசா பெற்று அங்கு சென்றவர்கள் ஆவர்.
ஹஜ் யாத்திரை குறித்த விவகாரத்தை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேரடியாக மேற்கொள்கிறது. ஹஜ் யாத்திரை சென்ற அனைத்துப் பாகிஸ்தானியர்களும் நாடு திரும்பி விட்டனர். உம்ரா சென்றவர்களில்தான் இத்தனை பேர் மொத்தமாக காணாமல் போயுள்ளனர் என்றார் அவர்.
காணாமல் போன லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்களில் பெரும்பாலானவர்கள் சவூதியிலேயே தங்கி சிறு சிறு வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்காக உள்ளூர் ஏஜென்டுகளுக்கு அவர்கள் பெரும் பணத்தைக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதாவது உம்ரா விசாவைப் பயன்படுத்தி, சவூதியில் வேலை பார்க்க இவர்கள் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் நாட்டவரை சவூதி அரசு கண்டுபிடித்து நாடு கடத்தியுள்ளது. இந்த நிலையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்களைக் காணவில்லை என்று அந்த நாட்டு அரசு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications