துபாய் சிறையில் வாடும் 4000 இந்தியத் தொழிலாளர்கள்
துபாய்: ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்திய 4000 இந்தியத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு துபாய் சிறையில் வாடி வருகின்றனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் ராஜஸ்தான், பஞ்சாப், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயின், ஜெபல் அலி தொழிற்பேட்டை பகுதியில், கடந்த வார இறுதியில் சரியான ஊதியம் தராதது, அடிப்படை வசதி இல்லாதது, குடிநீர் பற்றாக்குறை, தங்குமிடத்தில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அவர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர்.
அப்போது வன்முறை மூண்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 4000 பேர் இந்தியத் தொழிலாளர்கள். சிலர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து இந்தியத் தூதரக அதிகாரி பி.எஸ்.முபாரக் கூறுகையில், துபாய் சிறையில் 4000 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரையும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
சிறை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளுடன் பேசியுள்ளோம். மீண்டும் வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களில் ஈடுபட மாட்டோம் என்று தொழிலாளர்கள் உறுதியளித்தால், மீண்டும் தொழிலாளர்களை வேலைக்குத் திருப்பி அனுப்ப அதிகாரிகள் சம்மதித்துள்ளனர். அதேசமயம் இந்தியா திரும்ப விரும்புபவர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றார் அவர்.
தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து பிரவாசிபந்து அமைப்பின் தலைவர் கே.வி.சம்சுதீன் கூறுகையில், வீட்டு வேலை பார்க்கும் பெண்களுக்கான ஊதியத்தை உயர்த்தியது போல, பிற தொழிலாளர்களுக்கும் ஊதியத்தை உயர்த்துவது குறித்து வளைகுடா நாடுகளின் அரசுகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications