உரிமை மீறல் பிரச்சினை: ஜெவுக்கு நோட்டீஸ்
சென்னை: உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விளக்கம் அளிக்குமாறு கூறி அவருக்கு சட்டசபை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் ஜெயலலிதா அளித்த ஒரு பேட்டியில், அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னைக் கொல்ல சதி செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து சமீபத்தில் நடந்த சட்டசபையின் மழைக் காலக் கூட்டத் தொடரின்போது ஜெயலலிதா மீது அமைச்சர் ஸ்டாலின் உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பினார்.
இந்தப் பிரச்சினையை உரிமைக் குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் சபாநாயகருக்குக் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற சபாநாயகர் ஆவுடையப்பன், உரிமைக் குழுவுக்கு அதை அனுப்பி வைத்தார்.
துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி தலைமையிலான உரிமைக் குழு கூடி இதுதொடர்பாக விவாதித்தது. விவாதத்தின் இறுதியில், ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க உரிமைக் குழு தீர்மானித்தது.
அதன்படி ஜெயலலிதாவுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்த விவகாரம் தொடர்பாக நேரிலோ அல்லது உரிய முறையிலோ விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்த்து ஜெயலலிதா மனு:
இதற்கிடையில் சட்டசபை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஜெயலலிதா இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிகின்றது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications